ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 70-விவசாயிகள் 482 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 9 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 242 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 70 ரூபாய் முதல் 78 ரூபாய் ஏலம் விடப்பட்டது. 240 மூட்டை இரண்டாம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 47 ரூபாய் முதல் 67ரூபாய் ஏலம் விடப்பட்டது.கடந்த வாரத்தை விட 123 மூட்டைகள் வரத்து குறைந்துள்ளது. கிலோவிற்கு 0.42 காசுகள் விலை குறைந்துள்ளது. ரூ.15 லட்சத்திற்கு பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்