கொப்பரை தேங்காய் ஏலம்


கொப்பரை தேங்காய் ஏலம்
x

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். இதன்படி நேற்று நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு 85 விவசாயிகள் 546 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் 296 மூட்டைகள் முதல் ரகமாகவும், 250 மூட்டைகள் 2-வது ரகமாகவும் தரம் பிரிக்கப்பட்டது. ஏலத்தில் தாராபுரம், காங்கேயம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.75 முதல் ரூ.82.40 வரையும், 2-வது ரக கொப்பரை தேங்காய் ரூ.64.50 முதல் ரூ.72 வரையும் விற்பனை யானது. மழை குறைந்ததால் கடந்த வாரத்தை விட 277 மூட்டைகள் அதிகரித்து இருந்தன. ஆனாலும் கடந்த வாரத்தைவிட 1 ரூபாய் 10 காசுகள் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்்தனர். மேற்கண்ட தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.


Next Story