கொப்பரை தேங்காய் ஏலம்


கொப்பரை தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 7 Jun 2023 5:00 AM IST (Updated: 7 Jun 2023 5:01 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 83 விவசாயிகள் 625 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். இதில் 315 மூட்டைகள் முதல் ரகமாகவும், 310 மூட்டைகள் 2-வது ரகமாகவும் பிரிக்கப்பட்டது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 72 ரூபாய் 25 காசுகள் முதல் 77 ரூபாய் 85 காசுகள் வரை விற்பனையானது. 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.63 முதல் ரூ.68- வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட 195 மூட்டைகள் வரத்து அதிகரித்தது. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story