ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்


ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 68 விவசாயிகள் 375 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம் காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். 193 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்று 76 ரூபாய் முதல் 86 ரூபாய் 25 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. 182 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்று 62 ரூபாய் 50 காசுகள் முதல் 73 ரூபாய் வரை ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட 321 மூட்டைகள் குறைந்துள்ளது. வரத்து குறைந்ததன் காரணமாக கடந்த வாரத்தை விட 7 ரூபாய் 60 காசுகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்து உள்ளார்.


Next Story