ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்


ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
x

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். இதன்படி நேற்று முன்தினம் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து 55 விவசாயிகள் 382 மூட்டை கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் 206 மூட்டைகள் முதல் ரகமாகவும், 176 மூட்டைகள் 2-வது ரகமாகவும் பிரிக்கப்பட்டது. ஏலத்தில் தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.70.30 முதல் ரூ.75.40 வரையும், 2-வது ரகம் ரூ.58.50 முதல் ரூ.67.50 வரையும் விலை போனது.

ஏலத்திற்கு கடந்த வாரத்தைவிட 13 மூட்டை குறைவாக வந்தது. வரத்து குறைந்து இருந்தாலும், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்வதன் காரணமாக கடந்த வாரத்தை விட 2 ரூபாய் 21 காசுகள் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்துள்ளார்.


Next Story