கொப்பாத்தம்மன் கோவில் தேர் திருவிழா


கொப்பாத்தம்மன் கோவில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 10 July 2023 11:21 PM IST (Updated: 11 July 2023 3:41 PM IST)
t-max-icont-min-icon

கலவைபுத்தூர் கிராமத்தில் கொப்பாத்தம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவைபுத்தூர் கிராமத்தில் கொப்பாத்தம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேரில் கிராம தேவதை கொப்பாத்தம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி கலவை புத்தூர் கிராம வீதியில் செண்டை மேளத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். வழியெங்கும் வீதியில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு அம்மனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர்.

இதில் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், மாவட்டக் குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கலவை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயக்குமார், சங்கர், மண்ணு மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story