கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி


கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான கிரிக்கெட் காலிறுதி போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஊட்டி மற்றும் கோத்தகிரியில் நடந்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் பிரிவில் பதிவு செய்துள்ள 30 அணிகளில் 21 அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஊட்டி எச்.பி.எப் அணியும், கோத்தகிரி காட்டிமா அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி காட்டிமா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் யஷ்வந்த் 31 ரன்கள் (அவுட் இல்லை), ஆனந்தராஜ் 26 ரன்கள், சுதாகர் 25 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 120 பந்துகளில் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஊட்டி எச்.பி.எப். அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோத்தகிரி காட்டிமா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


Related Tags :
Next Story