கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?


கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
x

பராமரிக்கப்பட்ட கழிப்பிடம் பயனின்றி பூட்டி கிடக்கும் காட்சி.

தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் கழிப்பிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி: கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் கழிப்பிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கழிப்பிட வசதி

கோத்தகிரி ராயன் தெரு மற்றும் பொட்டு லைன் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களுக்கு உரிய கழிப்பிடம் இல்லாத நிலையில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ராயன் தெரு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், பெண்கள் துணிகள் துவைப்பதற்கான வசதி, குளியலறை, மின்சார வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய கழிப்பிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் அந்த கழிப்பிடத்தை பராமரிப்பு செய்ய 15-வது நிதிக்குழு அடிப்படை மானிய நிதி(டைடு மானியம்) 2021 -22 திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?

அதன்படி பணிகள் முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் ஆகியும் கூட கழிப்பிடம் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன் மீண்டும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமுதாய கழிப்பிடத்தை உடனடியாக திறந்து விட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story