கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.26-க்கு ஒத்திவைப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.26-க்கு ஒத்திவைப்பு
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.26-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், சம்சீர் அலி ஆகியோர் நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஆகஸ்ட் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story