கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ரூ.20 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாணவிகள் விடுதி திறப்பு


கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ரூ.20 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாணவிகள் விடுதி திறப்பு
x
தினத்தந்தி 6 May 2023 5:00 AM IST (Updated: 6 May 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ரூ.20 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாணவிகள் விடுதி திறப்பு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்ததால், வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் தனித்தனியே தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கட்டிடங்கள் உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து போனதால் மீண்டும் விடுதி கட்டிடங்கள் புதியதாக கட்டப்பட்டன. படிப்படியாக இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்து வந்த நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்நிலையில் மாணவிகள் 100 பேர் தங்கி படிக்கும் வகையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் ஏற்கனவே கட்டப்பட்டு, முறையான பராமரிப்பின்றி இருந்த மாணவியர் விடுதியை புதுப்பிக்க மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித் துறை மூலம் கட்டிடம் புதுப்பிக்க பட்டது. மாணவிகள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டன. இந்த விடுதி கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. இதன் மூலம் நடப்பாண்டில் 100 மாணவிகள் இந்த விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story