இடிந்து விழும் நிலையில் அபாயமாக காணப்படும் கொட்டமேடு அங்கன்வாடி மையம் - உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


இடிந்து விழும் நிலையில் அபாயமாக காணப்படும் கொட்டமேடு அங்கன்வாடி மையம் - உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 July 2023 7:00 PM GMT (Updated: 4 July 2023 6:02 AM GMT)

தேவர்சோலை அருகே கொட்டமேடு அங்கன்வாடி மையக் கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பெற்றோர், குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை அருகே கொட்டமேடு அங்கன்வாடி மையக் கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பெற்றோர், குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர்.

பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3-ம் வார்டில் கொட்டமேடு உள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் மணல் கொல்லி, குண்டம் வயல், பாலம் வயல், தர்ப்பக்கொல்லி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. ஆதிவாசி மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையாக விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இதனால் பணிக்கு செல்வதற்காக தங்களது கைக்குழந்தைகளை கொட்ட மேடு அங்கன்வாடி மையத்தில் விட்டு செல்கின்றனர். அங்கு ஏராளமான குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வழிந்தோடுகிறது. மேலும் கட்டிடத்தின் சுவர்கள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது.

இடியும் அபாயம்

இதனால் புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது அங்கன்வாடி மையக் கட்டிடமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக பழுதடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-1998-ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் கட்டிடம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story