மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன்


மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன்
x

மீனவர் வலையில் 5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன் சிக்கியது.

புதுக்கோட்டை

கட்டுமாவடி அருகே செம்பியன் மகாதேவிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சேகர் மற்றும் பரமசிவம். இவர்கள் இருவரும் கரையோரத்தில் பிடிக்கப்படும் பட்டி வலைக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பட்டிவலையில் 5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன் சிக்கி இருந்தது. இந்த மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. கார்த்திகை மாதம் என்பதால் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.520 என்ற கணக்கில் 5 கிலோவிற்கும் சேர்த்து ரூ.2,600-க்கு விற்பனையானது.


Next Story