கோவை குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய தடை விதிக்க வேண்டும்


கோவை குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய தடை விதிக்க வேண்டும்
x
திருப்பூர்

விடுதலை செய்ய தடை விதிக்க வேண்டும்

சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் தலைமை தபால் நிலையத்துக்கு நேற்று காலை வந்து பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, தமிழக கவர்னர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார்கள்.

அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தலைவர்கள் பிறந்த நாட்களில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்வது ஒரு வழக்கமாக உள்ளது. ஆனால் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்வதில் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நாட்டில் பொருளாதார சீர்கேடுகளை உண்டு பண்ணுதல் போன்ற குற்றங்களை செய்து சிறையில் உள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய தி.மு.க. அரசு முனைப்பு காட்டுவதை சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story