பவுர்ணமியையொட்டி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


பவுர்ணமியையொட்டி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

பவுர்ணமியையொட்டி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பவுர்ணமியையொட்டி இந்த கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் 1,008 சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு வளையல், குங்குமம், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கோபி அருகே கூகலூரில் செல்லாண்டியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், தயிர், எலுமிச்சம் பழச்சாறு, விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அம்னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


Next Story