ஊஞ்சலூர் அருகே சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


ஊஞ்சலூர் அருகே சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

ஊஞ்சலூர் அருகே சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே கொளாநல்லி கிராமம் சத்திரத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம், தீபாராதனையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து காவிரிக்கு சென்று பக்தர்கள் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலை 6 மணி அளவில் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரஷாபந்தனம், த்வார பூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் விமானம் மற்றும் சுவாமி யந்திர பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாம ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணி அளவில் யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான கலசம், சீனிவாச பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story