ஈரோடு மாவட்டத்தில் பழமை மாறாமல் புனரமைக்க 8 பெரிய கோவில்கள் தேர்வு


ஈரோடு மாவட்டத்தில் பழமை மாறாமல் புனரமைக்க 8 பெரிய கோவில்கள் தேர்வு
x

ஈரோடு மாவட்டத்தில் பழமை மாறாமல் புனரமைக்க 8 பெரிய கோவில்கள் தேர்வு

ஈரோடு

தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு சம்பந்தப்பட்ட கோவில்களை ஆய்வு செய்து கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் கோவில்கள் புனரமைக்கப்படும் அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 பெரிய கோவில்களை புதுப்பிக்க தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி கூறும்போது, 'தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான வல்லுனர் குழு கூட்டம் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடந்தது. இந்த வல்லுனர் குழுவின் ஆய்வுகள் பரிந்துரைபடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதற்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில், பவானி அருகே உள்ள எட்டுக்குட்டை அரங்கநாதர் கோவில், வெள்ளோடு ராசா கோவில், பெருந்துறை விஜயபுரி அம்மன் கோவில், காங்கயம் பாளையம் நட்டாதீஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுத சாமி கோவில், பவானிசாகர் அருகே உள்ள கெஜட்டி ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவர் வீரசுந்தரி கோவில், கோபி பொலவக்காளிபாளையம் பொன்னேந்தி நாராயண பெருமாள் கோவில் ஆகிய 8 கோவில்களை திருப்பணிக்கு தேர்வு செய்து வல்லுனர் குழுவுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து எந்தெந்த கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளலாம் என வல்லுனர் குழு பரிந்துரைத்த பின்னர் அந்த கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.


Next Story