பவானிசாகர் அருகே வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்


பவானிசாகர் அருகே வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்
x

பவானிசாகர் அருகே வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் கிராமம் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முதுகால் மலையில் வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு சென்று தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாக வேள்வி பூஜைகள், வேதிகார்ச்சனை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று காலை 8 மணி அளவில் கோவில் விமான கலசம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு மகா அலங்காரம் செய்யப்பட்டு் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story