கொடுமுடி, ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் குவிந்த பழனி காவடி பக்தர்கள்


கொடுமுடி, ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் குவிந்த பழனி காவடி பக்தர்கள்
x

கொடுமுடி, ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் பழனி காவடி பக்தர்கள் குவிந்தனர்.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி, ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் பழனி காவடி பக்தர்கள் குவிந்தனர்.

முருக பக்தர்கள்

பங்குனி மற்றும் சித்திைர மாதங்களில் முருக பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீர் எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பழனி கோவிலுக்கு செல்வார்கள்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் பங்குனி மாதம் பிறந்ததில் இருந்ேத நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வரத்தொடங்கினார்கள். இந்தநிலையில் நேற்று பங்குனி உத்திரம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குவிந்தார்கள்.

சாமி தரிசனம்

ஆற்றில் புனிதநீராடிய பின்னர் தீர்த்த குடங்களுக்கும், கலசங்களுக்கும், காவடிகளுக்கும் படித்துறையில் சிறப்பு பூஜை செய்தார்கள். பின்னர் மகுடேசுவரர் கோவிலுக்கு சென்று மகுடேசுவரர், வீரநாராயண பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு புறப்பட்டார்கள். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் காவிரி கரையிலும், கோவிலிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கொடுமுடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

ஊஞ்சலூர் படித்துறையில்...

வழக்கமாக காவடி பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்குதான் வருவார்கள். ஆனால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சில ஆண்டுகளாக கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் படித்துறைக்கு பழனி காவடி பக்தர்கள் வரத்ெதாடங்கி உள்ளார்கள். கடந்த 10 நாட்களாக பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடி தீர்த்தகுடங்களையும், காவடிகளையும் சுமந்துகொண்ட பழனிக்கு சென்றார்கள்.

ஊஞ்சலூர் படித்துறை சிறிய அளவிலேயே இருப்பதால் அதை விரிவு படுத்தி கட்டவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Next Story