ஊஞ்சலூர் இச்சிப்பாளையத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை
ஊஞ்சலூர் இச்சிப்பாளையத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை
ஈரோடு
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே இச்சிப்பாளையத்தில் இருந்து அக்னி நட்சத்திர பழனி பாதயாத்திரை குழுவினர் 15-வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர். இதற்காக பாதயாத்திரை குழுவினர் சுமார் 150 பேர் நேற்று முன்தினம் மதியம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்றனர். பின்னர் அங்கு தாங்கள் கொண்டு சென்ற குடங்களில் காவிரி ஆற்று நீரை நிரப்பி பூஜைகள் செய்து வழிபட்டனர். அதன்பின்னர் அனைவரும் மகுடேசுவரர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசித்தனர்.
அதைத்தொடர்ந்து இச்சிப்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று மாரியம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் தங்கி அன்று இரவு 7 மணி அளவில் ஆண்களும், பெண்களும் தாரை, தப்பட்டை முழங்க தீர்த்தக்குடங்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
Related Tags :
Next Story