வீரக்குமாரசாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.6½ லட்சம்

வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று உண்டியல் திறப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இங்கு உண்டியல் திறப்பு பணி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை காங்கயம் சரக ஆய்வாளர், கோயில் செயல்அலுவலர் ராமநாதன் மற்றும் கோயில் பணியாளர்கள், பூசாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 53 ரொக்கமும், 37 கிராம் தங்கம், மற்றும் 19½ கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றன. மேலும் கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் தேங்காய் பழக்கடை வைத்து நடத்தும் உரிமைக்கான பொது ஏலம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 500-க்கும், சிதறு தேங்காய் சேகர உரிமத்திற்கு ரூ.19 ஆயிரத்து 500-க்கும் ஏலம் விடப்பட்டது.
இந்த தகவலை இணை கோவில் செயல்அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.