கோபி பகுதி கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
கோபி பகுதி கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
ஈரோடு
கடத்தூர்
நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நேற்று மாலை 6 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் கோபி சாரதா மாரியம்மன் கோவில், கோபி மகா மாரியம்மன் கோவில், பச்சைநாயகி அம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் சாமி கோவிலில் உள்ள விசாலாட்சி அம்மன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி வீடுகளில் கொலுபொம்மை வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story