மாகாளியம்மன் கோவிலில்கொம்பன் குத்தும் திருவிழா
திருப்பூர்
பூளவாடியில் மிகவும் புகழ்பெற்ற மாகாளியம்மன், நாகதேவி அம்மன், மகாமுனி கோவில் உள்ளது. இக்கோவிலில் 2-ம் ஆண்டு கொம்பன் குத்தும் திருவிழா நடந்தது, திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது. அம்மனுக்கு தீர்த்தம் கொண்டுவருதல் நிகழ்ச்சியும், கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
மாகாளி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பூவோடு எடுத்து வந்தும் அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். கொம்பன் குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story