குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த கொழிசாளை மீன்கள்...!


குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த கொழிசாளை மீன்கள்...!
x

குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த கொழிசாளை மீன்கள். 1 கிலோ கொழிசாளை மீன் ரூ.20-க்கு விலை போன நிலையில் மீன்களை வியாபாரிகள் ஆர்வம் காட்டி வாங்கி சென்றனர்.

குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள்.

கழிந்த இரண்டு மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர்.

குளச்சல் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டண் கணக்கில் "கொழி சாளை" மீன்கள் பிடிப்பட்டிருந்தன. இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில் மீன்களின் விலையும் கணிசமாக குறைந்த நிலையில் இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் ஆர்வம் காட்டி குவிந்தனர்.

ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக 50-ரூ முதல் 60-ரூ வரை விலை போகும் நிலையில் இன்று ரூ 20-க்கு விலை போனது.


Next Story