பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டி
உடுமலை குறுமைய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டி நடைபெற்றது.
கேரம் போட்டி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடுமலையில் குருமைய போட்டி நடைபெற்று வருகிறது. போட்டிகள் அனைத்தும் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் ருத்திரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் உடுமலை குறுமைய பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கல்லூரி முதல்வர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
14 வயதுக்கு உட்பட்ட போட்டியில் 17 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்ட போட்டியில் 21 பள்ளிகளும், 19 வயதுக்கு உட்பட்ட போட்டியில் 11 அணிகளும் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டனர்.
ஒற்றையர் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட போட்டியில் 18 பள்ளிகளும், 17 வயதிற்கு உட்பட்ட போட்டியில் 21 பள்ளிகளும், 19 வயதிற்கு உட்பட்ட போட்டியில் 13 பள்ளிகளும் கலந்து கொண்டன.இதில் மாணவர்கள் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் கலந்து கொண்டு எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
துரோபால் போட்டி
ஒற்றையர் ஆட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புங்கமுத்தூர் ஜி.கே.என் மேல்நிலைப்பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புங்கமுத்தூர் ஜி.கே.என் மேல்நிலைபள்ளியும் வெற்றி பெற்றது.
இரட்டையர் ஆட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புங்கமுத்தூர் ஜி.கே.என் மேல்நிலைப்பள்ளியும் வெற்றி பெற்றது.
இதே போன்று மாணவிகளுக்கான துரோபால் போட்டி காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என அனைத்து பிரிவுகளிலும் ஸ்ரீவிசாலாட்சி பெண்கள் பள்ளி வெற்றி பெற்றது.