கிருஷ்ண ஜெயந்தி: அருகன் குளம் மகாதேவ கிருஷ்ண கோசாலையில் பக்தர்கள் தரிசனம்


கிருஷ்ண ஜெயந்தி: அருகன் குளம் மகாதேவ கிருஷ்ண கோசாலையில் பக்தர்கள் தரிசனம்
x

கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நெல்லை,

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணர், ராதை போல அலங்கரித்தும் கிருஷ்ணர் சிலைகளை வீட்டில் வைத்து கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள ஸ்ரீ மகாதேவ கிருஷ்ண கோசாலையில் இன்று காலை 5 மணியில் இருந்தே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மல்லிகைப்பூ, பிச்சிப்பூ போன்றவைகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ மகாதேவ கிருஷ்ண கோசாலையில் விஸ்வரூப தரிசனம் மற்றும் மகா ஆரத்தி நடைபெறுகிறது. சுவாமிக்கு ஒரு லட்சம் லட்டு தயார் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்ட உள்ளன. மேலும் 8,000 பானைகள் தயார் செய்யப்பட்டு அமுது படைக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 56 வகையான பிரசாதங்களும் தயார் செய்யப்பட்டு சுவாமிக்கு படைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Next Story