திருவட்டார் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா


திருவட்டார் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x

திருவட்டார் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

கிருஷ்ணஜெயந்தி

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. மாலையில் தீபாராதனையை தொடர்ந்து கோவிலில் உள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் குழந்தை கண்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் தொட்டிலை அசைத்து மகிழ்ந்தனர்.

இரவில் கிருஷ்ணன் கோவிலில் கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல் அருமனை அருகே உள்ள முழுக்கோடு, கடலிகோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது. பவனி புண்ணியம் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கி முழுக்கோடு வழியாக கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், முத்துக்குடையுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story