கீழப்பாவூர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கீழப்பாவூர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி ேகாவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அகண்ட நாம ஜெபம் நடைபெற்றது. சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். மாலை 6-30 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8 மணிக்கு சுவாமி வீதிஉலா, 9.30 மணி முதல் 11.30 மணி வரை நாமகீர்த்தனம், கும்ப ஜெபம், அபிஷேகம், நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ண ஜனனம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு உறியடி உற்சவம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story