கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்


கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
x

நெல்லையில் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

நெல்லையில் கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெல்லையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

வீடுகளிலும் கிருஷ்ணர் படங்கள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கோசாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சில இடங்களில் உறியடி விழாவும் நடத்தப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் மகா சிறப்பு ஆரத்தியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எட்டெழுத்து பெருமாள் கோவில்

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே கோசாலையில் உள்ள கோபால கிருஷ்ணருக்கு அதிகாலை 5 மணிக்கு உதயகால சிறப்பு தீபாராதனை, ஹரே கிருஷ்ணா அகண்ட நாம ெஜபம் நடந்தது.

காலை 9 மணிக்கு பூர்ணாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு சிறப்பு கோபூஜை, பகல் 12 மணிக்கு கிருஷ்ணருக்கு 108 வகையான பலகாரங்கள் படைக்கப்பட்டது.

பக்தர்களுக்கு பிரசாதம்

மாலை 6 மணிக்கு கிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண்பண்டங்களும் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெண்ணை பூசப்பட்டது. 5,008 மண்பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பிரசாதம் படைக்கப்பட்ட பானைகள், கலயங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் டோக்கன் வாங்கிய பக்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பானைகள், கலயங்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

லட்சுமி நரசிங்க பெருமாள்

நெல்லை டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள சந்தான கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

களக்காடு

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் நவநீதகிருஷ்ணர் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதுபோல களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் நடந்த விழாவில் பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

1 More update

Next Story