கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதி உலா


கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதி உலா
x
தினத்தந்தி 7 Sep 2023 7:30 PM GMT (Updated: 7 Sep 2023 7:31 PM GMT)

கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி முதலியார் குத்தகை பகுதியில் உள்ள ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர், ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 10-ம் ஆண்டு சுதர்சன யாக கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது. பின்பு கேரள செண்டை மேளத்துடன் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story