கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் பயனாளிகளை சென்றடைய வேண்டும் அலுவலர்களுக்கு செல்லகுமார் எம்.பி. அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் பயனாளிகளை சென்றடைய வேண்டும் அலுவலர்களுக்கு செல்லகுமார் எம்.பி. அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் பயனாளிகளை சென்றடைய அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று செல்லகுமார் எம்.பி. கூறினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. செல்லகுமார் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சிகள், மின்சாரத்துறை, பேரூராட்சிகள், வேளாண்மைத்துறை, வனத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பணிகள், முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் செல்லகுமார் எம்.பி. பேசியதாவது:-
திட்டப்பணிகள்
மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். கட்டுமான பணிகள் விரைவாகவும், தரமாகவும் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வனஅலுவலர் கார்த்திகேயனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், உதவி கலெக்டர்கள் சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), தேன்மொழி (ஓசூர்), ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, ஒன்றியக்குழு தலைவர்கள் அம்சாராஜன் (கிருஷ்ணகிரி), விஜயலட்சுமி (மத்தூர்), சரோஜினி (வேப்பனப்பள்ளி), லாவண்யா ஹேம்நாத் (சூளகிரி), கேசவமூர்த்தி (கெலமங்கலம்) சசி வெங்கடேஷ் (ஓசூர்) மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.