கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: நீதி விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்


கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: நீதி விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்
x

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்திட (கிரிமினல் ப்ரொசீஜர் கோட் 21-ன்படி) சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தியை நியமித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு உத்தரவிட்டார். நியமனம் செய்யப்பட்ட 30 நிமிடங்களுக்குள் விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தின் அருகில் வசிக்கக்கூடிய குடியிருப்புவாசிகளிடமும், கடைகளின் உரிமையாளர்களிடமும் விபத்து குறித்து கேட்டறிந்து அதை எழுத்துபூர்வமாக பதிவு செய்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை கலெக்டரிடம் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.


Next Story