கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு


கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
x

வெடிவிபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென்று வெடிவிபத்து நடந்து 9 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால் 15 பேர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வெடிவிபத்தால், பட்டாசு குடோனை சுற்றி இருந்த 5 கட்டிடங்கள் இடிந்து சேதமாகின.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் பழையபேட்டை பகுதியில் விபத்து நடந்த இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் விபத்துக்குள்ளான பட்டாசு குடோனில் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வெடி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.


Next Story