ஆறுமுக சுப்பிரமணியசுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு


ஆறுமுக சுப்பிரமணியசுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
x

காக்கையாடி ஆறுமுக சுப்பிரமணியசுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே பழையனூர் காக்கையாடியில் ஆறுமுக சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கிருத்திகை வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story