கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
விருத்தாசலம்
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம், சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளி காப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.