முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு


முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
x

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

கரூர்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுப்பிரமணியர் திருத்தேரில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story