கூடலூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
கூடலூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கூடலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவிற்கு ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி தலைமை தாங்கினார். கூடலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை முத்தாளம்மாள் வரவேற்று பேசினார். ஆலத்தூர் வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் வஹிதாபானு வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் ஆண்டறிக்கையை இடைநிலை ஆசிரியை தேவி வாசித்தார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியை தீபா செய்திருந்தார். விழாவினை அறிவழகன் தொகுத்து வழங்கினார். முடிவில் யுவராஜா நன்றி கூறினார்.