குடமுழுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா
சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா
சீர்காழி:
சீர்காழி சட்டை நாதர் கோவில் குடமுழுக்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இதில் முத்து சட்டநாத சாமிக்கு 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து முத்து சட்டநாத சாமிக்கு 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் எதாஸ்தானத்திலிருந்து முத்து சட்டை நாத சாமி புறப்பட்டு உற்சவம் மண்டபம் எழுந்தருள அங்கு சாமிக்கு 51 வகையான நறுமண திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், புனித நீர் அடங்கிய 108 கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு வஸ்திரம், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.