குடிமங்கலம் குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
குடிமங்கலம் குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
குடிமங்கலம்,
குடிமங்கலம் குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
குளம் நிரம்பியது
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. தேங்காயை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. குடிமங்கலம் பகுதிகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கொப்பரை தேங்காய் உற்பத்தி களங்கள் உள்ளன. குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
குடிமங்கலம் பகுதியில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் தடுப்பணைகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஒரு சில பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடிமங்கலம் குளம் நிரம்பி உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது "குடிமங்கலம் சுற்று வட்டாரபகுதியில் விவசாயத்துடன் இணைந்ததொழிலாககால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். தென்னை நீண்ட காலப்பயிர் என்பதால் கிணற்றுப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இது தவிர தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, என காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். குடிமங்கலம் குளம் நிரம்பி உள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. என்றார்.