விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சித்ரா தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலம் இயங்கி வரும் கரம் சேர்ப்போம் அமைப்பின் சார்பில் சாலையோர மக்களுக்கு உணவு, உடை வழங்குதல், முதியோர்கள், ஊனமுற்றோர்கள், குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தல், ரத்ததானம் செய்தல், பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்தல், மரக்கன்று நடுதல், தூய்மை இந்தியா திட்ட பணிகள் மேற்கொள்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருவதையொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விருது வழங்கினார். இந்த விருதை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சித்ரா, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் லெனின் குமார், சந்தோஷ், சிவா, ஜகத்ரட்சகன் மற்றும் வருண் குமார் ஆகியோர் பெற்றனர். விருது பெற்ற அலுவலர் சித்ரா மற்றும் மாணவர்களை கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், மாணவ-மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.