தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக தன்னார்வலர்களை கவுரவப்படுத்துதல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சந்திரா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அங்குராஜ், செயலாளர் பால்சாமி, பொருளாளர் சாகிர் உசேன், எக்ஸ்னோரா சந்திரன், திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, புனித இருதய உயர்நிலை பள்ளி முதல்வர், மெர்கண்டைல் வங்கி மேலாளர் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் சுகாதார ஆய்வாளர் சந்திரா நன்றி கூறினார்.