வைர கம்மல்களை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு


வைர கம்மல்களை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
x

குப்பையில் வீசப்பட்ட வைர கம்மல்களை மீட்ட தூய்மை பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் கொண்டசமுத்திரம் பலமநேர் ரோடு அம்பேத்கர் சிலை அருகே வசிப்பவர் கல்பனா. இவர் கடந்த 26-ந் தேதி வீட்டிலிருந்த குப்பைகளை, குப்பைத்தொட்டியில் வீசி உள்ளார்.

அப்போது கவனக்குறைவாக வைரக் கம்மல்களையும் சேர்த்து வீசியிருக்கிறார்.

இதுகுறித்து நகரமன்ற தலைவர் சவுந்தரராசனுக்கு தகவல் தெரிவித்து, அவர் சம்பவ இடத்திற்கு சென்று குப்பைகளை சேகரித்து எடுத்துச் சென்ற தூய்மை பணியாளர்களை மீண்டும் வரவைத்து அந்த குப்பைகளை கீழே கொட்டி அதில் தேடிய போது கல்பனாவின் வைர கம்மல்கள் மீட்டெடுக்கப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் விஜய், கோபால் ஆகியோருக்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன் தலைமையில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் புத்தாடைகள், பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் மொய்தீன், களப்பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ், நகரமன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூய்மை பணியாளர்களை புத்தாடை அணிவித்து அழைத்து வந்து அவர்களை சிறப்பு இருக்கையில் அமர வைத்து சிறப்பு செய்தனர்.


Related Tags :
Next Story