பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
தூத்துக்குடி
உடன்குடி:
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று பரிசு கோப்பையை கைப்பற்றினர்.
மேலும் ஏரலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திரைப்பட வசனம் ஒப்புவித்தல் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவி ஆரோக்கிய ஜேஸ்மின், 9-ம் வகுப்பு மாணவி கிராஸ்லின் ஆகியோர் பங்கு பெற்றனர். இதில் மாணவி கிராஸ்லின் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்து ரூ.3,000 ரொக்க பரிசும், சான்றிதழும் பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story