பள்ளி மாணவிக்கு பாராட்டு


பள்ளி மாணவிக்கு பாராட்டு
x

கடையம் அருகே பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி விருத்திகாஸ்ரீ, செல்லம்மாள் பாரதி கற்றல் மைய திறப்பு விழாவில் நடைபெற்ற பேச்சு போட்டியில், நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல. ஒளி வீச போகும் விண்மீன்கள் என பேசி வெற்றி பெற்றார். இதையொட்டி நடந்த பாராட்டு விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி, முதல்வர் மாரி செல்வி மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


Next Story