பள்ளி மாணவிக்கு பாராட்டு

கடையம் அருகே பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
கடையம்:
கடையம் அருகே கோவிந்தபேரி ஊராட்சி ஞானம் மறவா நடுநிலைப்பள்ளி மாணவி மீனா, தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டு விழா கோவிந்தபேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இசேந்திரன் வரவேற்றார். ஞானம் மறவா நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் சேவியர் ஞானம் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிக்கு பதக்கம் அணிவித்து பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டியன், பொன்னுத்தாய், நாகராஜன், சுகிர்தா, விவசாய சங்க தலைவர் சிங்கக்குட்டி, ஆசிரியர்கள் வேலம்மாள், சுப்பையா, அபராஜிதன், உத்திராட் ஜெயா, லிங்கசாமி, மாலதி, பிரின்ஸ் ஜோசப், விஜி, சுமதி பாலா, ரஜி ஹனிபர், பொதுமக்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் அன்னகிருஷ்ணன் நன்றி கூறினார்.






