மாணவிக்கு பாராட்டு
பதக்கம் வென்ற மாணவி பாராட்டப்பட்டார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 32-வது தேசிய சப்-ஜூனியர் கபடி போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு அணி கலந்து கொண்டு 2-வது இடம் பெற்று வெள்ளி கோப்பை மற்றும் பதக்கங்களை பெற்றது. இந்த அணியில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி கற்பகவல்லி கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.
மாணவி கற்பகவல்லிக்கு கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை பத்மாவதி வரவேற்று பேசினார். மாணவிக்கு, பள்ளி செயலாளர் கதிர்வேல் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினசாமி, ஆழ்வார்சாமி, செல்லசாமி, வெங்கட சுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுபா, மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story