அனாதை பிணங்களை அடக்கம் செய்த மாணவனுக்கு பாராட்டு


அனாதை பிணங்களை அடக்கம் செய்த மாணவனுக்கு பாராட்டு
x

காவனூர் இந்திரா நர்சரி பள்ளி சார்பில் அனாதை பிணங்களை அடக்கம் செய்த மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.

ராணிப்பேட்டை

ஆற்காட்டை சேர்ந்த சமூக சேவகர் பென்ஸ் பாண்டியன். இவரது மனைவி தேவிபென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகர சபை தலைவர். இவர்களது மகன் எஸ்.ஆர்.பி.பி.தாருகேஸ்வரன் (வயது 12). 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அனாதை பிணங்களை தாருகேஸ்வரன் தானே அடக்கம் செய்தான். சிறுவனின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள், தாரகேஸ்வரனை தங்களது பள்ளிக்கு அழைத்து வந்து பாராட்டி, சால்வை அணிவித்து, 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளி கணக்காளர் எஸ்.லட்சுமி, கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார்.

2 பிணங்களை அடக்கம் செய்த மாணவன் தாருகேஸ்வரனை பாராட்டி, 5-ம் வகுப்பு மாணவர்கள் எஸ்.ஹேமஸ்ரீ, எச்.வர்ஷா, வி.கே.மோத்திகா, எம்.ஆர்..பூவரசன் ஆகியோர் நாமும் இந்த இளம் வயதில் நல்ல சமூக சேவைகள் செய்ய வேண்டும், இளம் பருவத்தில் இது போன்ற சேவைகள் செய்வதை அனைவரும் பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என கூறினர். முடிவில் ஆசிரியை எஸ்.பிரேமலதா நன்றி கூறினார்.


Next Story