ஒற்றை சுருள்வாள் வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு
ஒற்றை சுருள்வாள் வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அரியலூர்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளி மாணவிகள் பிரிவில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டு போட்டிகளில் 38 பேர் கலந்து கொண்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஆதிரா ஒற்றை சுருள்வாள் வீச்சு பிரிவில் 2 நிமிடங்களில் 20 செய்முறைகள் செய்து முதலிடம் பெற்று பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசினை வென்றுள்ளார். அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவி ஆதிரா, கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை கலெக்டர் பாராட்டி, மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்தினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story