சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
தென்காசி
கடையநல்லூர்:
கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று முன்தினம் நோபல் வேல்டு ரெகார்டு சார்பாக நடைபெற்ற திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு திருக்குறள் ஒப்புவித்துக்கொண்டே இடைவிடாது ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றுதல் போட்டி நடைபெற்றது. இதில் கடையநல்லூர், முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த 9 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழும், பதக்கமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் அண்ணாதுரை, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாரியப்பன் மற்றும் பள்ளியின் முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சிலம்பம் பயிற்றுவிப்பாளர் வெங்கடேஷ், மணிகண்டன் மற்றும் உதவி புரிந்த ஆசிரியர்கள் பேபி, மங்கையர்கரசி, வேலம்மாள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story