குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வு


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
x

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுர சம்காரவிழா அடுத்த மாதம் 5-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக போலீஸ் துணைத்தலைவர் பிரவேஸ் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் கோயில் செயல் அலுவலர் இராமசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

1 More update

Next Story