குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழா


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழா
x
தினத்தந்தி 24 July 2023 12:20 PM GMT (Updated: 24 July 2023 12:21 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழா வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி

உடன்குடி,

மைசூருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தசரா திருவிழாவுக்கு பெயர் போனது குலசேகரன்பட்டினம் தான். உலக அளவில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக் கொடை விழா வரும் 31ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

ஆகஸ்டு 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி, 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.15 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது.

2ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், 10 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story